
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த காலப்பகுதியில், ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை ஜனவரி 15 ஆம் திகதி பதிவாகியுள்ளதாகவும், அன்றைய தினம் 10,483 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த 25 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 41,603 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவிலிருந்து 22,876 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,329 பேரும், ஜேர்மனியிலிருந்து 14,431 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

