
நிட்டம்புவ பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நிட்டம்புவ – அரலிய ஒழுங்கை, பின்னகொல்லவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்தப் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றிவளைப்பின் போது, முச்சக்கர வண்டி ஒன்றில் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு 90 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் உள்ள திட்டமிடப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘டுபாய் வருண’, ‘மொஹமட் சித்திக்’ ஆகியோருடன், தற்போது சிறையில் உள்ள திலிந்து சஞ்சீவ எனப்படும் ‘லேனா’ என்பவரின் நெருங்கிய சகா என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

