
2026 கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்
2026 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகியது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் பாடசாலைத் தவணையின் முதலாம் கட்டம் கடந்த ஜனவரி 05 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை நடைபெற்றிருந்தது. இதனையடுத்து, டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் காரணமாக, ஜனவரி 10 ஆம் திகதி முதல் நேற்று வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளதன் காரணமாக, எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 02 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரமழான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாத்திரமாக பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 22 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

