
மஹர மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இன்று15 மணி நேர நீர் வெட்டு
மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 15 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நீர் குழாய்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை (18) காலை 7 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

