சனி மற்றும் செவ்வாய் தினங்களில் இலங்கை- சீன விமான சேவை ஆரம்பம்

சனி மற்றும் செவ்வாய் தினங்களில் இலங்கை- சீன விமான சேவை ஆரம்பம்

பெய்ஜிங் டாக்சிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவது விமான சேவையாக கேபிடல் ஏர் லைன்ஸ், இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்த விமானம் பீரங்கி நீர் பாய்ச்சி வரவேற்கப்பட்டது.

இது இலங்கை விமான சேவையுடன் இணையும் மற்றுமொரு புதிய விமான சேவையாகும் .

சீனாவின் பெய்ஜிங் (Beijing Daxing International Airport) டெக்சிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 01.46ற்கு 170 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் புறப்பட்ட கேபிடல் ஏர் லைன்ஸ் விமானம் (Capital Airlines)JD-487 கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இனிவரும் காலங்களில் ,ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமையும் பிற்பகல் 02.20ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்த விமானம் அதே நாளில் மாலை 04.20ற்கு சீனாவின் பெய்ஜிங்கிற்கு புறப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விமானப் பயணம் 08 மணி நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீன துணைத் தூதர் ஜு யான்வே, கட்டுநாயக்க விமான நிலையத்தின் நிர்வாகத் தலைவர் அருண ராஜபக்ஷ மற்றும் விசேட பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )