மீகஹகிவுல பலகொல்ல வித்தியாலயத்திற்கு முன் பெற்றோர் ஆர்ப்பாட்டம்

மீகஹகிவுல பலகொல்ல வித்தியாலயத்திற்கு முன் பெற்றோர் ஆர்ப்பாட்டம்

வியலுவ கல்வி வலயத்தைச் சேர்ந்த மீகஹகிவுல பலகொல்ல வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் சுமார் நூறு மாணவர்களின் பெற்றோர், இன்று (03) காலை பாடசாலையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பலகொல்ல வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றம் செய்து, அவருக்குப் பதிலாக வேறொருவரை அதிபராக நியமித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் அதிபர் பாடசாலையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், பாடசாலைக்கு அவர் அவசியமானவர் எனவும் பெற்றோர் தெரிவித்தனர்.

அவரை இடமாற்றம் செய்வதை மீளாய்வு செய்ய முடியாவிட்டால், தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபரை நீக்கி, அதற்குப் பதிலாக புதிய அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )