
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜபடுத்தப்படுகிறார்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா துப்பாக்கியைக் காட்டி பெண்ணொருவரை அச்சுறுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .
காணி தகராறு ஒன்றே இந்த மோதலுக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த காணியின் உரிமை தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இக்காணி தன்னுடையது என அர்ச்சுனா உரிமை கோரும் நிலையில், மற்றுமொரு பெண்ணும் அதற்கு உரிமை கோரி வருகிறார்.
கடந்த 25ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறித்த காணியைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குரியது எனக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றியதாலேயே பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

