பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரை பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரை பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்

இலங்கையில் தனது சேவையை நிறைவு செய்து வெளியேறும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம்-உல்-அசீஸ், நேற்று (02 ) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) ஆகியோரை பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.

கொழும்பிலுள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்திற்கு வருகை தந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு, பிரதி அமைச்சர் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இதே நாளில் மற்றொரு சந்தர்ப்பத்தில், பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளரை சந்தித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், அவருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இரு சந்திப்புகளிலும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான கூட்டுறவை மேம்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது, சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுக்காக, ஜனாதிபதி மற்றும் இலங்கை மக்களின் சார்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாகிஸ்தான் அரசுக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.

அத்துடன், இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய பெருந்தன்மையான ஆதரவுக்கும் உதவிக்கும் பாதுகாப்பு செயலாளர் நன்றி தெரிவித்தார்.

இலங்கையுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளில், மேலும் வலுப்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து உறுதியாக செயல்படும் என உயர்ஸ்தானிகர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்த சந்திப்புகளில் பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கேர்னல் முகம்மது பாரூக்கும் கலந்து கொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )