சீமெந்து கலவை உடைந்து வீழ்ந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

சீமெந்து கலவை உடைந்து வீழ்ந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

கொழும்பு – முகத்துவாரம் ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பு தொகுதியின் 07ஆவது மாடியின் சுவரில் பூசப்பட்டிருந்த சீமெந்து கலவை உடைந்து வீழ்ந்ததில் காயமடைந்த 07 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் தமது பாட்டியுடன் குடியிருப்பு தொகுதியிலுள்ள கடைக்கு அருகில் இருந்த போது நேற்றைய தினம் (04) சீமெந்து கலவை உடைந்து வீழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )