மஹிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

மஹிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக 14 ஆயிரம் கரம்போடுகள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 50 மில்லியன் ரூபாய்க்கும் மேலாக இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவித்து முன்னாள் அமைச்சர்கள் மகிந்தானந்த அலுத்கமகே, நளின் பெர்ணான்டோ மற்றும் விளையாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவரச்சி ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்வைக்கப்பட்ட அடிப்படை எதிர்ப்புகள் தொடர்பான உத்தரவை அறிவிப்பதை எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு இன்று (05) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளிகளாக பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் நலின் பிரனாண்டு ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )