மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

தலத்துவோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலெத்தென்ன பகுதியில் நேற்று (29) மாலை இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், 83 வயதுடைய மூதாட்டியொருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

தொலைக்காட்சி அன்டனாவுடன் இணைக்கப்பட்டிருந்த அறுந்து விழுந்த மின்கம்பியின் மீது தவறுதலாக கால் வைத்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலத்துவோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )