
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானம்அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இரண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் , அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகள் என இரு தரப்பினரும் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் ,10.02.2023 திகதியில் அரச சேவையில் நியமனம் பெற்று, தற்போது சேவையில் உள்ள உத்தியோகத்தர்களாக இருத்தல் வேண்டும் எனவும்
10.02.2023 அன்று 45 வயதிற்கு அதிகமாதவராகவும், அன்றைய திகதியில் பட்டப்படிப்பு தகுதிகளை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும்.
மேலதிக விபரங்கள் தேவைப்படுமானால் , வேலை நாட்களில் முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை ,தமிழ் மொழி மூலமான தகவல்களை அறிய 0112-785634 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.ஜே.எஸ்.எஸ். ஏதிரிசூரிய தெரிவித்துள்ளார்.

