
சாலையோர வடிகாலில் சடலம் மீட்பு
மத்துகம – அகலவத்த பிரதான சாலையில், டெல்கஸ் சந்திப்புக்கு அருகிலுள்ள சாலையோர வடிகாலில் நேற்று (07) ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் மிரிஸ்வத்த, இத்தேபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகொட மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

