
ட்ரீம் கேர்ள் படத்தின் டிரெய்லர் வெளியானது
இயக்குநர் எம்.ஆர். பாரதி எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படமான ‘ட்ரீம் கேர்ள்’ படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
கதாநாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும், நடிகை பபிதாவின் மகளுமான ஹரிஷா ஜெஸ்டின் நடித்துள்ளார்.
மேலும், பிரபு சாஸ்தா, துருவன் மற்றும் இந்திரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம், வெறும் 20 நாட்களில், ரூ.7 லட்சத்திற்கும் குறைவான செலவில் உருவாக்கப்பட்டதாக இயக்குநர் எம்.ஆர். பாரதி தெரிவித்துள்ளார்.
முழு படப்பிடிப்பும் ஊட்டியில் நடத்தப்பட்டுள்ள நிலையில், ‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் டிரெய்லரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படம், காதலர் நாளான பிப்ரவரி 14ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
CATEGORIES Cinema

