
டி20 உலகக் கோப்பை ; நியூசிலாந்து வெற்றிக்காக 183 ஓட்டங்கள் தேவை
ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 4ஆவது போட்டி சென்னையில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுதாட தீர்மானித்தது. அப்படி துடுப்பெடுத்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பதிவு செய்தது.
இதன்படி, நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 183 ஓட்டங்களை வெற்றியிலக்காக அடைய வேண்டியுள்ளது.
CATEGORIES Sports News

