
வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்
வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க. பிரகாஸ், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனால் இன்றைய தினம் (09) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பான நியமனக் கடிதம் ஆளுநர் செயலகத்தில் வைத்து அவருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இன்று தொடக்கம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதீபன்

