போர்ச்சுக்கல் ஜனாதிபதி தேர்தலில் அந்தோனியோ ஜோஸ் செகுரோ செகுரோ அமோக வெற்றி

போர்ச்சுக்கல் ஜனாதிபதி தேர்தலில் அந்தோனியோ ஜோஸ் செகுரோ செகுரோ அமோக வெற்றி

போர்ச்சுக்கல் நாட்டில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஆளும் மிதவாத இடதுசாரி சோசலிசக் கட்சியைச் சேர்ந்த அந்தோனியோ ஜோஸ் செகுரோ 66.8 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வலதுசாரி Chega கட்சியின் வேட்பாளர் ஆன்ட்ரே வெஞ்சுரா 33.2 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், செகுரோ சுமார் 3.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை கைப்பற்றியுள்ளார்.

இது 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு போர்ச்சுக்கல் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகளாகக் கருதப்படுகிறது.

வரும் மார்ச் 9 ஆம் திகதி அந்தோனியோ ஜோஸ் செகுரோ புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )