
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இஸ்லாத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை, சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அடுத்த மாதம் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளாக சட்டமா அதிபரிடம் வழக்கை ஒப்படைக்காதது நியாயமற்றது என்பதால், பொலிஸாருக்கு தாமதத்திற்கான காரணத்தை தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
CATEGORIES Sri Lanka

