
நைல் நதியில் படகு கவிழ்ந்து 15 பேர் பலி
சூடானில் நைல் நதியில் பயணிகள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைல் நதி மாகாணத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷெண்டி மாவட்டத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நேர்ந்த போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 27 பேர் படகில் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் மாயமாக உள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணியில் உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
CATEGORIES World News

