மன்னாரில் 50 கிலோவிற்கும் அதிக ஹஷிஸ் போதைப்பொருள் மீட்பு: இருவர் கைது

மன்னாரில் 50 கிலோவிற்கும் அதிக ஹஷிஸ் போதைப்பொருள் மீட்பு: இருவர் கைது

மன்னார் கடற்பரப்பில் இன்று (14) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, கைப்பற்றப்பட்ட டிங்கி படகில் இருந்து 50 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள ஹஷிஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

மன்னார் தெற்கு கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு சந்தேகநபர்களுடன் இந்த டிங்கி படகும், கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட படகு மற்றும் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உரப்பைகள், சந்தேகநபர்களுடன் மன்னார் தாழ்வுபாடு (Thalpudu) இறங்குதுறைக்கு கொண்டு வரப்பட்டன.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, மூடைகளில் 50 கிலோகிராமுக்கும் அதிக ஹஷிஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கைப்பற்றப்பட்ட டிங்கி படகு, போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )