இலங்கை – ஆஸ்திரேலியா மற்றும்இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் விற்று முடிக்கப்பட்டன

இலங்கை – ஆஸ்திரேலியா மற்றும்இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் விற்று முடிக்கப்பட்டன

2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், இலங்கை – ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் (Tickets) முழுமையாக விற்று முடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதனால், நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக கவுண்டர்களுக்கு (Tickets Counters) வரவேண்டாம் என கிரிக்கெட் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போட்டி நாளை (பிப்ரவரி 15) இரவு 7.00 மணிக்கு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஊருகொடவைத்த பகுதியில் அமைந்துள்ள நுழைவுச்சீட்டு வழங்கும் கவுண்டர் மூடப்பட்டுள்ளதாக கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை – ஆஸ்திரேலிய ஆண்களுக்கு இடையிலான போட்டி நாளை மறுதினம் (பிப்ரவரி 16) கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் பல்லேகல, அபிதா மைதானத்தில் அமைந்துள்ள நுழைவுச்சீட்டு கவுண்டர் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )