கொழும்பு ஜிந்துபிட்டிய மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலிமூவர் வைத்தியசாலையில்

கொழும்பு ஜிந்துபிட்டிய மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலிமூவர் வைத்தியசாலையில்

கொழும்பு ஜிந்துபிட்டிய வரக்கா சந்தி பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்குள் இன்றிரவு இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ,களுத்துறை வடக்கு, வடியமங்கட பகுதியில் உள்ள கடை ஒன்றிற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த 32 வயதுடைய நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )