பிரதமரின் மகா சிவராத்திரி தின செய்தி

பிரதமரின் மகா சிவராத்திரி தின செய்தி

இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருளை நீக்கி ஒளியையும், அறியாமையை நீக்கி ஞானத்தையும் வழங்கும் ஒரு புனித நாளாக மகா சிவராத்திரி போற்றப்படுகிறது. இது ஆன்மீக ஒழுக்கம், தியானம் மற்றும் மன அமைதிக்கான ஒரு உன்னத தருணமாகும். பன்முகத்தன்மை கொண்ட எமது சமூகத்தில், சுயநலமற்ற சேவை, கருணை மற்றும் ஒற்றுமையின் மூலம் சவால்களை முறியடிக்க முடியும் என்பதை இவ்விழா நமக்கு நினைவூட்டுகிறது.

பக்தர்கள் இந்த இரவை பிரார்த்தனையிலும் தியானத்திலும் கழிக்கும் வேளையில், நமது நாடு அமைதியும் செழிப்பும் மிக்கதாக மாற அந்த இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சிவபெருமானின் அருளால் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அமைதியும், ஆரோக்கியமும், ஆன்மீக ஞானமும் பெருகட்டும்.

ஓம் நம சிவாய.

ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )