தயாசிறி ஜெயசேகரின் கட்சி உறுப்பினர் இடைநீக்கத் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை

தயாசிறி ஜெயசேகரின் கட்சி உறுப்பினர் இடைநீக்கத் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (17) தயாசிறி ஜெயசேகர அவர்களின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தயாசிறி ஜெயசேகர சமர்ப்பித்த மனுவை ஆராய்ந்த பின்னர் குறித்த இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகச் செயல்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் மேலும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, வழக்கின் மேலதிக விசாரணைகள் பின்னர் தொடரவுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )