அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

அநுர குமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோரை இன்று (18) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு புதுடெல்லி நகரில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நரேந்திர மோடி அவர்களின் விசேட அழைப்பிற்கு இணங்க ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அதனை ஒட்டியே இந்த உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )