20 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி யில்பிரபல இலங்கை வர்த்தகர் மித்ரபால லங்கேஷ்வரவாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கலினன் சீரிஸ் II

20 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி யில்பிரபல இலங்கை வர்த்தகர் மித்ரபால லங்கேஷ்வரவாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கலினன் சீரிஸ் II

அரிசி ஆலை உரிமையாளரும் பிரபல வர்த்தகருமான மித்ரபால லங்கேஷ்வர, ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) காரை வாங்கியுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேசிய லங்கேஷ்வர, 2025 ரோல்ஸ் ராய்ஸ் கலினன் சீரிஸ் II (Rolls-Royce Cullinan Series II) ரகத்தைச் சேர்ந்த இந்த சொகுசு எஸ்யூவி (SUV) வாகனத்தை வாங்குவது தனது நீண்டகால தனிப்பட்ட இலட்சியங்களில் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் சந்தைபெறுமதி 5 லட்சம் அமெரிக்கா டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கைப் ரூபாய்களில்
சுமார் 15 கோடியாகும் . எனினும் ,வாகன இறக்குமதிக்கு இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள அதிக வரியுடன் சேர்த்து சுமார் 20 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தகர் மித்ரபால லங்கேஷ்வர, ‘ரத்ன சஹால்’ நிறுவனத்தின் முக்கிய நபரும் பல்வேறு வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள
‘ரத்ன குரூப் ஒப் கம்பனிஸ்’ (Rathna Group of Companies) நிறுவனத்தின் உரிமையாளருமாவார்.

அதேவேளை, பல பில்லியன் ரூபா பெறுமதியான ஆறு அல்லது ஏழு இருக்கைகளைக் கொண்ட ஜெட் விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்யும் திட்டத்தையும் அவர் இதே வாரத்தில் அறிவித்துள்ளார்.

இந்த விமானம் வணிக ரீதியான பயணங்களுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், இதன் மூலம் நிறைவேற்று அதிகாரிகள் ஒரே நாளில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு மீண்டும் இலங்கை திரும்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை மற்றுமொரு பிரபல வர்த்தகரான டட்லி சிறிசேன, அண்மையில் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் VIII (Rolls-Royce Phantom VIII) காரை இறக்குமதி

இன்று விடுவிக்கப்படவுள்ள கல்லினன் வாகனத்தின் மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )