
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 508 பேர் கைது
பொலிஸாரால் நேற்று (21) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 28,369 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தம் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி,
- குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் – 19
- பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் – 325
- திறந்த பிடியாணை பெற்றவர்கள் – 210
- மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் – 226
- அலட்சியமாக வாகனம் செலுத்தியவர்கள் – 44
- ஏனைய வாகனக் குற்றங்கள் – 3,681
பிடியாணை பெற்றவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், இவ்வாறான விசேட பொலிஸ் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

