
மொரட்டுவை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு
மொரட்டுவ, கொரலவெல்ல ஜூபிலி வீதியில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சடலமாக மீட்கப்பட்டவர், மொரட்டுவை கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது திட்டமிடப்பட்ட படுகொலையை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முதற்கட்டமாக, உயிரிழந்த பெண்ணுடன் தனிப்பட்ட தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மரணம் தொடர்பாக வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.
தனிப்பட்ட கோபத்தின் விளைவாக இந்த மரணம் ஏற்பட்டதா அல்லது கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது உடற்கூறுப் பரிசோதனையின் பின்னரே உறுதிப்படுத்தப்படும் என மருத்துவர்கள்.
மொரட்டுவ பொலிஸ் நிலையம் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

