வடகொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக கிம் ஜாங் உன் மீண்டும் தேர்வு

வடகொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக கிம் ஜாங் உன் மீண்டும் தேர்வு

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஆளும் கொரியாவின் தொழிலாளர் கட்சி கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் 9வது மாநாட்டில், கிம் ஜாங் உன் ஒருமனதாக மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது தந்தை கிம் ஜாங் இல் காலத்தில் இந்த மாநாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 2016ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் உரையாற்றிய கிம் ஜாங் உன், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு “கடுமையான பொருளாதாரத் தடைகள்” மற்றும் தட்டுப்பாடுகளை சமாளித்து, பொருளாதாரம் ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, பொருளாதார கட்டுமானத்தை விரைவுபடுத்துவதும் கட்சியின் பிரதான கடமையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், அவரது மகள் கிம் ஜூ ஏ, எதிர்கால அரசியல் வாரிசாக உருவெடுத்து வருவதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அண்மைக் காலமாக பல முக்கிய பொது நிகழ்வுகளில் தந்தையுடன் இணைந்து பங்கேற்று வருவது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )