
அமெரிக்காவின் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் வரை ஈரான் மீது தாக்குதல் தொடரும் – டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவின் அனைத்து நோக்கங்களும் நிறைவேறும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும் காலங்களில் அமெரிக்க ஆயுதப்படை வீரர்களுக்கு மேலதிக உயிர்ச்சேதங்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஈரானின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி தனது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தப் பேச்சுவார்த்தைகள் மிக விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று ஈரானின் தெஹ்ரான் நகர் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நேற்று நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 9 கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பதிலடியாக, ஈரான் தரப்பிலிருந்து பிரித்தானிய மற்றும் அமெரிக்க எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

