எரிபொருள் கையிருப்பு போதுமானதுவீண் அச்சம் வேண்டாம்

எரிபொருள் கையிருப்பு போதுமானதுவீண் அச்சம் வேண்டாம்

  • இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் போது மாத்திரமே QR முறையைப் பயன்படுத்தி விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தற்போது நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR முறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், எந்த நேரத்திலும் QR முறையைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (02) வழக்கம் போல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், காலை 9:45 வரையான காலப்பகுதிக்குள்
டீசல்: 2,925,349 லீற்றர்,ஒக்டேன் 92 பெட்ரோல்: 2,904,000 லீற்றர்
அளவுகளில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன் நேற்று (01) மாத்திரம் வி
டீசல்: 3,081,349 லீற்றர்,ஒக்டேன் 92 பெட்ரோல்: 3,920,400 லீற்றர்
அளவுகளில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும், அதற்கான போதிய கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தேவையற்ற பதற்றமடைந்து பொதுமக்கள் தொடர்ந்து எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பது கவலைக்குரிய விடயம் என அவர் தெரிவித்தார்.

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வீடுகளில் எரிபொருளைச் சேமித்து வைப்பது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது. இது தொடர்பாக கடும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

நேற்று (01) இவ்வாறு எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எரிபொருளை முறைகேடாகச் சேமித்து வைப்பவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், அது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்துமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )