பொது அவசரகால நிலையை மீண்டும் நீடிக்க அரசாங்கம் அவதானம்

பொது அவசரகால நிலையை மீண்டும் நீடிக்க அரசாங்கம் அவதானம்

பொது அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (02) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதற்கான யோசனை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பிப்ரவரி 28ஆம் திகதிக்குப் பிறகு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படவில்லை. அத்துடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் பணிகளும் ரத்தாகின. இவ்வாறானதொரு சூழலில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது குறித்து

அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?
இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு
அமைச்சர் பதிலளித்தார்.

நிச்சயமாக,அது குறித்து பரிசீலித்து வருகிறோம். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவே ஆலோசித்து வருகிறோம் என நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.

நாட்டில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி அனர்த்த நிலைமையைத் தொடர்ந்தே பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

அந்த அவசரகால நிலை கடந்த பிப்ரவரி 28ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்ததுடன், அது நீடிக்கப்படவில்லை. இதனால் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் அதிகாரங்களும் முடிவுக்கு வந்தன.

எவ்வாறாயினும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தற்போது எரிபொருள் வரிசைகளில் தேவையற்ற முறையில் காத்திருப்பதை காணமுடிகிறது. இதனைச் சமாளிக்கவே மீண்டும் அவசரகால நிலையை கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )