
தெஹ்ரானில் உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையம் மீது தாக்குதல்
இஸ்ரேலிய அரசியல் தலைமைத்துவத்தின் வழிகாட்டலின் கீழும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) ஆதரவுடனும் ஈரானின் தேசிய எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் தெஹ்ரானில் உள்ள தேசிய எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டன. இதில் சுமார் 30 எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் (Oil Storage Tanks) தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
போர் ஆரம்பமானதில் இருந்து ஈரானின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவாகும். இது ஈரான் ஆட்சியின் உட்கட்டமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் விரிவாக்கம் என விவரிக்கப்படுகிறது.
பிரதான சுத்திகரிப்பு வளாகத்திற்கு அருகில் உள்ள எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்டுள்ளது.
எனினும், சுத்திகரிப்பு நிலையத்திற்கு சேதம் ஏற்படவில்லை எனதெரிவிக்கப்படுகிறது..
தெஹ்ரானை நோக்கி தொடர்ச்சியான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பெரும் போர் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்டுகிறது.

