24 மணித்தியாலங்களுக்குள் ஈரானின் புதிய உயர் தலைவர் தெரிவாகுவார் – ஈரான்

24 மணித்தியாலங்களுக்குள் ஈரானின் புதிய உயர் தலைவர் தெரிவாகுவார் – ஈரான்

ஈரானின் புதியஉயர் தலைவரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, ஈரான் புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய பார்ஸ் (Fars) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஈரானின் உயர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட நிபுணர்கள் சபையின் (Assembly of Experts) உறுப்பினர் ஒருவரை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நிபுணர்கள் சபையின் உறுப்பினர் ஹொசைன் மொசாபரி (Hossein Mozzafari), இந்தப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

: இந்தத் தெரிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், பொதுமக்கள், பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அவை பரவுவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )