லெபனான் நாடாளுமன்ற தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பு

லெபனான் நாடாளுமன்ற தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பு

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே நிலவும் தீவிர போர் சூழல் காரணமாக, எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருந்த லெபனான் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் வெளியிட்டுள்ளார்.

பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளுக்கு மேலாக இஸ்ரேலிய போர் விமானங்கள் பறந்து கொண்டிருந்த ஒரு பதற்றமான சூழ்நிலையிலும், இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் ஹிஸ்புல்லா நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மொஹமட் ராத் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )