இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும் போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

சைபர் தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் காணப்படுவதால், இலங்கைத் தொழிலாளர்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

தூதுவர் நிமல் பண்டாரவின் அறிக்கை,
“இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கப் படைகள் சம்பந்தப்பட்ட மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் 11 நாட்களாகத் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைக் காணமுடிகிறது. நேற்று இரவு மட்டும் 7 முறை எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் போது, அவை பெரும்பாலும் இராணுவ மற்றும் தகவல் தொடர்பு இலக்குகளை நோக்கியே ஏவப்படுகின்றன.”

“இதற்குக் மேலதிகமாக, இன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. சமூக ஊடகங்கள் அல்லது மின்னஞ்சல்கள் ஊடாக அறிமுகமில்லாத எண்களில் இருந்தோ அல்லது கணக்குகளில் இருந்தோ வரும் செய்திகள் மற்றும் கோப்புகளை எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் சைபர் தாக்குதல்களை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )