சிறைக்கைதிகளுக்கு உறவினர்களைச் சந்திக்க விசேட வாய்ப்பு

சிறைக்கைதிகளுக்கு உறவினர்களைச் சந்திக்க விசேட வாய்ப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்குத் தமது உறவினர்களை நேரில் சந்திப்பதற்கான விசேட வாய்ப்பினை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்றும் (ஏப்ரல் 13) நாளையும் (ஏப்ரல் 14) இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய, நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவு அல்லது இனிப்புப் பண்டங்கள் அடங்கிய ஒரு பார்சல்,சுகாதாரப் பொருட்கள் ஒரு கைதிக்கு போதுமான அளவில் இருக்க வேண்டும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விசேட ஏற்பாடானது புத்தாண்டு காலப்பகுதியில் கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )