ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலைவாய்பிற்கானபுதிய கதவுகள் திறப்பு

ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலைவாய்பிற்கானபுதிய கதவுகள் திறப்பு

ஜப்பானில் தொழில்நுட்ப சார் பயிற்சிப் பெறுநர்களாக வனவளத் துறையில் பயிற்சி பெறுவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் (SLBFE) ஜப்பானின் IM Japan நிறுவனத்திற்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வனவளத் துறையில் பயிற்சி வாய்ப்புப் பெற்ற முதலாவது குழுவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இன்று (11) ஜப்பான் நோக்கிப் புறப்பட்டனர்.

இவர்களுக்கான விமானப் பயணச் சீட்டுகளை பணியகத்தின் தலைவர் கோஷல விக்கிரமசிங்க வழங்கி வைத்தார்.

வனவளத் துறைக்கு மேலதிகமாக, மேலும் 7 துறைகளில் இலங்கையர்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இன்றைய தினம் இக்குழுவுடன் கட்டுமானத் துறையில் பயிற்சி பெற்ற 6 பேரும் ஜப்பான் சென்றனர்.

இதுவரை பணியகத்தின் தலையீட்டில் 659 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் ஜப்பானுக்குப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )