
ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்
ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேல்வும் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி வான்வழி தாக்குதல் மேற்கொண்டது.
தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்களில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது மனைவி, மகள் மற்றும் மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் உயிரிழந்துள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
இந்த சம்பவங்களால் ஈரானும் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள இந்த போர்ச்சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஈரானில் இனி குறிவைப்பதற்கு எதுவும் இல்லை. ஈரான் மீதான தாக்குதலில் பெரும்பாலான இலக்குகளை அடைந்துவிட்டோம். இன்னும் சில நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகு விரைவில் ஈரானில் போர் முடிவுக்கு வரும்” என தெரிவித்தார்.

