
ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகளை மார்ச் 31-ஆம் திகதி வெளிப்படுத்துவேன்
அரசாங்கம் வெளியிடாத ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி மற்றும் பிரதான சூத்திரதாரி யார் என்பதை மார்ச் 31-ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்துவேன் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் மற்றும் வழக்கறிஞர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் , ”ஒன்றரை வருட ஆராய்ச்சிக்கு பிறகு ‘ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தேடுதல்’ என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி புத்தகத்தை தயாரித்துள்ளேன். அது மார்ச் 31-ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு சம்புத்தத்வ ஜெயந்தி மந்திரில் வெளியிடப்படும்.” என தெரிவித்துள்ளார்.

