
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகள் நடத்த தடை
விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட புதன்கிழமைகளில் கல்வி நிலையங்கள் அல்லது தனியார் நிலையங்களில் மேலதிக வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளபோதிலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரசாங்கம் விசேட அரச விடுமுறை தினமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

