
“சிங்ஹிந்தியா” சமாதான நடைபயணம்
வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடைபயணம் யாழ்ப்பாணம் நகரத்தில் இருந்து தொடங்கி கொழும்பு வரை தொடரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வின் மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தினரின் பாதுகாப்பு, நில உரிமைகள், வாழ்வாதார சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தேசிய மட்டத்தில் முன்வைக்கப்படுவது முக்கிய குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடைபயணம் மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதீபன்

