
தங்கத்தின் விலையில் மீண்டும் வீழ்ச்சி
இலங்கையின் ஆபரணத் தங்கச் சந்தையிலும் இன்றைய தினம் (19) இருமுறை பாரிய விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
எனினும், நண்பகலின் பின்னர் அதன் விலையில் மேலும் 4,000 ரூபாய் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இன்றைய இந்தத் திடீர் வீழ்ச்சி நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

