
IRIS Bushehr கப்பல் இதுவரை திருகோணமலைத் துறைமுகம் நோக்கி கொண்டு செல்லப்படவில்லை
ஈரானுக்குச் சொந்தமான ஐரிஸ் புஷேர் கப்பல் இதுவரை திருகோணமலைத் துறைமுகம் நோக்கி கொண்டு செல்லப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹெரத் தெரிவித்துள்ளார்.
இன்று (19) நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர், குறித்த கப்பல் தற்போது கொழும்பு நகரத்திலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் விளக்கமளித்த அவர், “கப்பலை திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தாலும், ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அது சாத்தியமாகவில்லை.
இதற்காக தேவையான தொழில்நுட்ப உதவியை தனியார் நிறுவனமொன்றிடமிருந்து பெற்றுள்ளோம். விரைவில் கப்பலை திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka

