பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 100000 ரூபாய் பெறுமதியான 25 கிலோ பாதுகாக்கப்பட்ட தாவர பகுதிகளுடன்               சீனப் பயணி கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 100000 ரூபாய் பெறுமதியான 25 கிலோ பாதுகாக்கப்பட்ட தாவர பகுதிகளுடன் சீனப் பயணி கைது

இலங்கையிலிருந்து வெளியேற முயன்ற சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து, பாதுகாக்கப்பட்ட தாவர இனமான 25 கிலோகிராம் கொத்தலஹிம்புடு (Kothalahimbutu) தாவர பகுதிகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

37 வயதுடைய சீனப் பயணி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (China Eastern Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான MU 6018 விமானம் மூலம் ஷாங்காய் நோக்கிச் செல்லவிருந்த போதே சுங்க அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

குறித்த தாவரப் பொருட்கள் தேயிலைப் பாக்கெட்டுகள் போல உருமறைக்கப்பட்டு, பயணப் பொதிகளுக்குள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சுங்கத் திணைக்கள சட்டங்களுக்கமைய கொத்தலஹிம்புடு ஏற்றுமதி செய்வது பின்வரும் சட்டங்களின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது:

வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் (Fauna and Flora Protection Ordinance) மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டம் (Customs Ordinance) ஆகியவற்றுக்கமைய
இத்தகைய அங்கீகரிக்கப்படாத ஏற்றுமதிகள் சட்டவிரோத வனவிலங்கு கடத்தலாகக் கருதப்படுவதுடன், சர்வதேச உடன்படிக்கைகளையும் மீறுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தாவரங்களின் பெறுமதி சுமார் 100,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவை அரச உடமையாக்கப்பட்டுள்ளன. விமான நிலைய சுங்க அதிகாரிகள், பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமை பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )