களுத்துறை கடலில் காணாமல் போன இரண்டு மாணவர்கள்: தேடும் பணி தீவிரம்

களுத்துறை கடலில் காணாமல் போன இரண்டு மாணவர்கள்: தேடும் பணி தீவிரம்

களுத்துறை, பயாகல கடற்கரையில் நீராடச் சென்று காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவரும் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றனர்.

மாணவர்கள் குழுவொன்று நேற்று (24) பயாகல கடற்கரையில் நீராடச் சென்ற போது, குறித்த இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை மற்றும் கல்பாத்த பகுதிகளை சேர்ந்த 15 வயதான மாணவர்கள் இருவரே காணாமல் போயுள்ளனர்.

இந்தநிலையில், காணாமல் போன மாணவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )