மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றதாகவும், மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் பூநகரி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சென்மன்குண்டு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தனது விவசாய நிலத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் மோதியதால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )