பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட் கான்

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட் கான்

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் முன்னேறியுள்ளார்.

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை ரஷீட் அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ரஷீட் கான், 2. கேஷவ் மஹராஜ், 3. மகேஷ் தீக்‌ஷன, 4. ஜொஃப்ரா ஆர்ச்சர், 5. குல்தீப் யாதவ், 6. பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ், 7. மிற்செல் சான்ட்னெர், 8. அடில் ரஷீட், 9. மற் ஹென்றி, 10. இரவீந்திர ஜடேஜா.

இதேவேளை சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையிலும் ஆறாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த போட்டிகளில் 60 ஓட்டங்களைப் பெற்றதுடன், 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரஷீட்டின் சக சகலதுறைவீரர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய், இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. அஸ்மதுல்லா ஓமர்ஸாய், 2. சிகண்டர் ராசா, 3. மொஹமட் நபி, 4. ரஷீட் கான், 5. மெஹிடி ஹஸன் மிராஸ்.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )