
கொரிய மொழிப் பரீட்சைக்கான அனுமதி அட்டை விநியோகம் ஆரம்பம்
தென் கொரியாவில் உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறைகளுக்கான தொழில் வாய்ப்புகளுக்காக 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கொரிய மொழிப் பரீட்சைக்காக அனுமதி அட்டை இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் https://services.slbfe.lk/KoreanData/Index_ConfirmConsent க்கு பிரவேசித்து அனுமதி அட்டையினை பெற்றுக்கொள்ள முடியும்.










