
சிகிரியா கண்ணாடி சுவரில் கிறுக்கிய பெண்ணுக்கு விளக்கமறியல்
உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான சீகிரியாவின் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதியை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் சிகிரியா கண்ணாடி சுவரில் பெயரை எழுதிய போது நேற்று (15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட யுவதி அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி, தனது நண்பர்களுடன் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்றபோது இந்தச் செயலைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
CATEGORIES Sri Lanka

